

சென்னை,
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழக அரசு நிர்வாகத்தை மேலும் வேகப்படுத்த, பல்வேறு முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
*சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.குமரகுருபன், வணிக வரித்துறை செயலாளராக நியமனம்.
(சுவர்ணா ஐஏஎஸ் இடமிருந்து இருந்த சமய அறநிலையங்கள் துறை மற்றும் தற்போது கூடுதலாக குமரகுருபன் ஐஏஎஸ் இடம் வழங்கப்பட்டுள்ளது)
* சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் ஜி.பிரகாஷ், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்,
* எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையர் வி.ஷோபனா ஜவுளித்துறை ஆணையராக நியமனம்.
* வணிக வரித்துறை செயலாளராக இருந்த ஷில்பா பிரபாகர் சதிஷ் தொழிலாளர் துறை ஆணையராக நியமனம்.
* ஜவுளித்துறை ஆணையராக சோபனா நியமனம்
* போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையர் கிரண் குர்ராலா, ந்கரமைப்புத்துறை ஆணையராக நியமனம்
* விடுப்பிலிருந்து திரும்பிய கே.விஜயகார்த்திகேயன், மீன்வளத்துறை இயக்குநராக நியமனம்
* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தலைவர், மேலாண் இயக்குநராக கார்த்திகேயன் நியமனம்
* சேலம் மாநகராட்சி ஆணையராக லலிதாதித்யா நீலம் நியமனம்.
* கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், சமூக நலத்துறை இயக்குநராக நியமனம்
* கரூரிலிருந்து மாற்றப்பட்ட ரவிக்குமார், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக நியமனம்.
* தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக எஸ்.ஏ.ராமன் நியமனம்.
* சுற்றுலா, கலாச்சாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமனம்
* தொழில், முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்துரி நியமனம்
* பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ் நியமனம்
* நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா நியமனம்
* மீன்வளத்துறை இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம்
* சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார் நியமனம்
* ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்
* போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பாஸ்கர பாண்டியன் நியமனம்
* கருவூலத்துறை இயக்குநராக சாருஸ்ரீ நியமனம்
* சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இயக்குநராக ஆஷா அஜித் நியமனம்
* நில அளவை மற்றும் குடியமர்வு இயக்குநராக கிறிஸ்துராஜ் நியமனம்
*பசுமை எரிசக்திக்கழக நிர்வாக இயக்குநராக வினய் நியமனம்
*தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக அனீஷ் சேகர் நியமனம்
* ஊரக வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரியாக சஜீவனா நியமனம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.