

கொரோனாவால் ஏற்பட்டு வரும் பாதிப்பும் சேதமும் போர்க்களத்தில் உணரப்படுவது போலாகும். பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கிராமப்புறங்களில், ஒரு வீட்டில் 2 அல்லது 3 பேர் காய்ச்சல் இருப்பதாக கூறி உள்ளூர் டாக்டர்கள் மற்றும் மருந்து கடைகளில் இருந்து மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
மக்கள் சிகிச்சைக்கு சென்றால் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பி உள்ளன. இடங்கள் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற நிலையே உள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ. தொழிற்சாலை அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்து தேவைக்கேற்ப சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கான அதிக தேவையை பூர்த்தி செய்ய, சேலம் உருக்காலை, திருச்சி பெல் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெருந்துறை தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.