வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

சேர்வைக்காரன்மடத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஹேமலதா தலைமை தாங்கினார். சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து தலைவி ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் காளீஸ்வரி, முடிவைத்தானந்தல் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் முருகேசன் ஆகியோர் சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் சேர்வைக்காரன்மடம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் காமாட்சி, சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com