வருசாபிஷேக விழா

பாளையங்கோட்டை பிரசன்ன விநாயகா, முருகன் கோவிலில் வருசாபிஷேக விழா
வருசாபிஷேக விழா
Published on

நெல்லை பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகா மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இடம் கோட்டையாக அமையப்பெற்று காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது. கோட்டையின் கீழே விநாயகா மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் அமைந்துள்ளது. காலப்போக்கில் கோட்டை சிதிலம் அடைந்தாலும் இக்கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். சிறப்பு வாய்ந்த இந்த சன்னதியில் 10-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் விழாவில் முதல்நாள் ஷண்முகா அர்ச்சனையும், 2-வது நாள் அருணகிநாதா குருபூஜையும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான வருசாபிஷேக விழா நேற்று உத்திராட நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதற்காக காலை விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், பூணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று பிரசன்ன விநாயகா மற்றும் சுப்பிரமணியசுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பாவார மூத்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடாந்து மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவில் பிரசன்ன விநாயகா, வள்ளி- தேவவேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com