கோவிலில் வருசாபிஷேக விழா

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது
கோவிலில் வருசாபிஷேக விழா
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், மூல மந்திரஜெபம், துர்க்கா ஹோமம், யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கிரிவல பாதையில் முதல் முறையாக சுவாமி வீதி உலா நடைபெற்றது. கிரிவலைப்பாதை சுற்றிலும் பெண்கள் கோலமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com