

செங்கோட்டை:
செங்கோட்டை சைவ வேளாளர் கட்டிடம் அருகில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை, அதனை தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைதொடந்து அன்னதானம் வழங்கப்பட்டது.