கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய வசந்தாமணி உயிரிழப்பு

கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய வசந்தாமணி உயிரிழந்துள்ளார். #mla
கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய வசந்தாமணி உயிரிழப்பு
Published on

வேலூர்,

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கடந்த 21ந்தேதி போளூரில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு கால்களையும் வாரி கீழே தள்ளினார். தடுமாறி தரையில் சாய்ந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முகத்தில் குத்தினார்.

இதனை கண்டு திடுக்கிட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் வாலிபரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரை தாக்கினர். காயமடைந்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை உடனடியாக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

இந்த வழக்கில் போளூரை சேர்ந்த வசந்தாமணி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வசந்தாமணி வேலூரில் உள்ள அடுக்காம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கடந்த 24ந்தேதி அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் ஒரு வார சிகிச்சை பலனின்றி வசந்தாமணி இன்று காலை உயிரிழந்து விட்டார்.

#mla #AIADMK #attack

X

Daily Thanthi
www.dailythanthi.com