வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி

வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி
Published on

திருச்சி,

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தெடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக பேரணி தொடர்பாக திருமாவளவன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ் பாலாஜி உள்ளிட்ட கட்சி மேலிட பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேரணியின்போது வி.சி.க. தலைவர் திருமாவளவன் திறந்த வாகனத்தின் மீது பயணித்தார். அப்போது அவர் தொண்டர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். வி.சி.க துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு உள்ளிட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com