கரூர்: வி.சி.க. பிரமுகர் பாலியல் அத்துமீறல் - அண்ணாமலை கண்டனம்

திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
கரூர்: வி.சி.க. பிரமுகர் பாலியல் அத்துமீறல் - அண்ணாமலை கண்டனம்
Published on

கரூர்,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கரூர் மாவட்டம் குளித்தலையில், வீட்டின் வெளியே துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், மது போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் என்ற நபர்.

திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பதை விட, அவர்களைக் காப்பாற்றுவதில்தான் திமுக அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், வீட்டுக்குள் அத்துமீறி பாலியல் தாக்குதல் நடத்தும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எந்த பயமும் இல்லாமல் போய்விட்டது.

நமது வீட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், வரும் தேர்தலில், திமுக ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டே ஆகவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com