விசிக பேரணி ஜூன் 14-ம் தேதிக்கு மாற்றம்

விசிக பேரணி வருகிற 31-ந்தேதி நடைபெறுவதாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
விசிக பேரணி ஜூன் 14-ம் தேதிக்கு மாற்றம்
Published on

திருச்சி,

திருச்சியில் வருகிற 31-ஆம் தேதி விசிக சார்பில் 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பெயரில் மாபெரும் எழுச்சி பேரணி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், திருச்சியில் வருகிற 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com