'கூட்டணியில் இருந்தும் வி.சி.க. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது' - திருமாவளவன்


கூட்டணியில் இருந்தும் வி.சி.க. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது - திருமாவளவன்
x

பா.ஜ.க.வின் செயல்திட்டத்தை நிறைவேற்ற பலபேர் பல வேஷம் போடுகின்றனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

பேரணியின்போது வி.சி.க. தலைவர் திருமாவளவன் திறந்த வாகனத்தின் மீது பயணித்தார். அப்போது அவர் தொண்டர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது;-

"திருச்சியில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாம் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் நமக்கு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கிக்கொண்டு களத்தில் நிற்கும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

பா.ஜ.க.வின் செயல்திட்டத்தை நிறைவேற்ற பலபேர் பல வேஷம் போடுகின்றனர். சில பேர் சினிமா புகழோடு வந்திருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணிய மாட்டான். அம்பேத்கர் அரசியல் வேறு. அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

1 More update

Next Story