ஆதனூர்வேதகிரி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

ஆதனூர் வேதகிரி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆதனூர்வேதகிரி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Published on

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற வேதகிரி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடைபெற்று, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி, யாக சாலை பூஜை நடைபெற்றது. விழாவில் நேற்று காலை 4-ம் காலயாகசாலை பூஜை நடைபெற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, வேதகிரி அய்யனார் விமான கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com