வேதாரண்யம்: நடந்து சென்ற விவசாயி மீது பைக் மோதியதில் பலி..!

வேதாரண்யம் அருகே நடந்து சென்ற விவசாயி மீது பைக் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேதாரண்யம்: நடந்து சென்ற விவசாயி மீது பைக் மோதியதில் பலி..!
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட நல்லதங்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (வயசு 65). இவர் நேற்று வீட்டிலிருந்து வேதாரண்யத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தென்னம் புலத்தை சேர்ந்த பத்மாவதி (52) ஸ்ரீராம் (22) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது ரோட்டில் நடந்துவந்த பாலசுப்பிரமணியன் மீது மோதி விட்டனர். இதில் காயம்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்கமால் இறந்துவிட்டார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் வந்த பத்மாவதி, ஸ்ரீராம் ஆகியோர் காயங்களுடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com