வீராணம் ஏரி நடப்பாண்டில் முதல் முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, நடப்பாண்டில் முதன்முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
வீராணம் ஏரி நடப்பாண்டில் முதல் முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நூறு சதவிகித மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த ஆண்டில் மட்டும் வீராணம் ஏரி 9 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் பாசனத்திற்கும், சென்னையின் குடிநீர் தேவைக்கும் போதிய நீர் கிடைத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக வீராணம் ஏரி முழுக்கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து கீழணையில் இருந்து விநாடிக்கு 582 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் சேத்தியார்தோப்பு அணைக்கட்டுக்கு 412 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. விவசாய பாசனத்திற்காக 96 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பாசன தேவை முடிந்ததும், சென்னையின் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் அனுப்பப்படும் என்பதால் கோடை கால நீர் தேவையை எளிதில் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com