வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி அருகே வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவாகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

தேனி அருகே வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. பொருளியல், எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. எனவே மாணவ, மாணவிகள் www.tngasapg.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். இத்தகவலை வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கவுசல்யா தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com