வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் - டிடிவி தினகரன் வீரவணக்கம்

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் - டிடிவி தினகரன் வீரவணக்கம்
Published on: 

சென்னை,

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் பிறந்து, பாரதத்தின் விடுதலை வேட்கைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த மாமன்னரும், தமிழர்களின் வீரத்தைத் தலைமுறைகள் கடந்தும் பறைசாற்றும் சுதந்திரப் போராட்ட வீரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினம் இன்று.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமலும், அடக்குமுறைக்கு அடிபணியாமலும், மண்ணின் உரிமைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் துணிந்து நின்ற மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com