இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

மு.வீரபாண்டியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் பதவி வகித்து வந்தார். தற்போது அவரது பதவி காலம் முடிவடைந்துள்ளது. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடுத்த மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இவர் முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடுத்த மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






