வீரபாண்டிய கட்டபொம்மன்-வேலுநாச்சியார் பிறந்த நாள்: கவர்னர் மலர்தூவி மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் பிறந்தநாளையொட்டி அவர்களது உருவப்படத்துக்கு சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்-வேலுநாச்சியார் பிறந்த நாள்: கவர்னர் மலர்தூவி மரியாதை
Published on

சென்னை,

வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் பிறந்தநாளையொட்டி அவர்களது உருவப்படத்துக்கு சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் கவர்னர் தனது எக்ஸ் பதிவில், 'விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளில் அவர்களை தேசம் பணிவுடன் வணங்கி மரியாதை செலுத்துகிறது.

அடங்காத துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் இணையற்ற வீரத்துடன் நமது வரலாற்றின் மிக முக்கியமான சுதந்திர கால போராட்டத்தின் தீப்பொறியை ஏற்றி, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஒன்றுபடவும் போராடவும் எண்ணற்ற மக்களை அவர்கள் தூண்டினர்.

அவர்கள் அனுபவித்த மிகப்பெரிய துன்பங்களும் மிகுதியான தியாகங்களும் 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய கடமைகளை என்றும் நமக்குநினைவூட்டும்' என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com