வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகள் விலை அதிகரிப்பு

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.
வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகள் விலை அதிகரிப்பு
Published on

கோயம்பேடு,

வெளிமாநிலங்களில் பெய்யக்கூடிய கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடிய காய்கறி வரத்து குறைந்து காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு 7 ஆயிரம் டன்னில் இருந்து 5 ஆயிரத்து 500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்ட காய்கறிகளின் விலை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறி விலை (கிலோவில்) நிலவரம் வருமாறு:-

வெங்காயம் - ரூ.21, நவீன் தக்காளி - ரூ.15, நாட்டு தக்காளி - ரூ.15, உருளை - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.38, ஊட்டி கேரட் - ரூ.65, ஊட்டி பீட்ரூட் - ரூ.50, கர்நாடக பீட்ரூட் - ரூ.22, முள்ளங்கி - ரூ.20, முட்டைக்கோஸ் - ரூ.30, வெண்டை - ரூ.15, உஜாலா கத்தரி - ரூ.25, வரி கத்தரி - ரூ.25, பாகற்காய் - ரூ.35, முருங்கைக்காய் - ரூ.35, புடலங்காய் - ரூ.20, சேனைக்கிழங்கு - ரூ.28.

X

Daily Thanthi
www.dailythanthi.com