

அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் பருவாச்சி அருகே பெட்ரோல் போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிய காய்கறி வியாபாரி மீது கார் மோதிய விபத்தில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பவானி நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). இருசக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர். நேற்று மோட்டார் வாகனத்தில் பருவாச்சியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
அதன் பின்னர், பவானி சாலையில் மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நிறுத்தம் அருகே பின்னால் பருவாச்சி காந்திநகர் பஸ் கார் எதிர்பாராதவிதமாக அன்பழகனின் வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்பழகன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.