மகாளய அமாவாசையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறி, பழங்கள் விற்பனை

மகாளய அமாவாசையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறி, பழங்கள் விற்பனை ஆனது.
மகாளய அமாவாசையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
Published on

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வர தொடங்கினர். நேற்று ஒரே நாளில் இங்கிலீஷ் காய்கறிகள் (அக்ரோ காய்கறிகள்) மற்றும் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 39 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்துக்கு விற்பனையானது. சுமார் ஒரு டன் பூக்களும் விற்பனையானது.

தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 142 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 59 வகையான காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறி வாங்க வந்தனர். வழக்கமாக ஒரு நாளைக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். புரட்டாசி 4-வது சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com