வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி

தூத்துக்குடியில் ஒருவருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.-ல், உங்களது வாகனம் வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி
Published on

தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டேல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து வாகன உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தெடர்பாக தூத்துக்குடி தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவர் கூறுகையில், "எனக்கு இன்று அதிகாலை 4.13க்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் உங்களது வாகனம் (எண் xxxx) வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலையில் வீட்டில் எனது காரை நிறுத்தி இருந்த நிலையில் எப்படி எனது காருக்கு டோல்கட்டணம் வசூலித்தனர் என தெரியவில்லை. இதுகுறித்து டோல் பிளாசாவுக்கு பேன் செய்தபேது, அவர்கள் போனை எடுக்கவில்லை. எனவே இது தெடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளேன்" என்றார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com