வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை தொடங்கியது

இன்று முதல் ரெயில் சேவை இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை தொடங்கியது
Published on

சென்னை,

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரெயில்களை இயக்குவதற்கான 'தற்காலிக அதிகாரப்பூர்வச் சான்றிதழை' ரெயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் வழங்கியிருப்பதாகவும், இன்று முதல் ரெயில் சேவை இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை தற்போது தொடங்கியுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எத்தனை சேவைகள் என்பதன் விவரம் வருமாறு:-

சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே இருமார்க்கமாகவும் 86 சேவைகள், கடற்கரை- வேளச்சேரி இடையே இருமார்க்கமாகவும் 4 சேவை, பரங்கிமலை-வேளச்சேரி இடையே இருமார்க்கமாகவும் 6 ரெயில் சேவைகள் என மொத்தம் இந்த வழித்தடங்களில் 96 சேவைகள் தினந்தோறும் இயக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com