

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாங்கண்ணி திருவிழாவின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு, தெற்கு மத்திய ரெயில்வே கீழ்க்கண்டவாறு விரைவு சிறப்பு ரெயில்களை (தேவைக்கேற்ப இயக்கப்படும் ரெயில்கள்) அறிவித்துள்ளது.
1. ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி – சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்கள்:
ரெயில் எண் 07125 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (2 சேவைகள்).
மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07126 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில், 2026 ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) மாலை 19.30 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.00 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (2 சேவைகள்).
பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்(Luggage cum Brake Vans).
ரெயில் எண் 07125/07126 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):
2. ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லாபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில்கள்:
ரெயில் எண் 07127 சார்லபள்ளி - வேளாங்கண்ணி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 8 அன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.40 மணிக்கு சார்லபள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும் (1 சேவை).
மறுமார்க்கத்தில், ரெயில் எண் 07128 வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 9 அன்று (புதன்கிழமை) இரவு 23.00 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 22.15 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும் (1 சேவை).
பெட்டிகளின் அமைப்பு: 3 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two-Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three-Tier) பெட்டிகள், 10 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள்.
ரெயில் எண் 07127/07128 சார்லபள்ளி - வேளாங்கண்ணி - சார்லபள்ளி விரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):
மேற்கூறிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, தெற்கு ரெயில்வே தரப்பில் 13.08.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.