

சென்னை,
வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தாம்பரம் - திருவாரூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06067) வருகிற 28-ந்தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு திருவாரூர் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருவாரூர் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06068) 29-ந்தேதி திருவாரூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.