வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இன்று மாலை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றி வைக்கிறார்.
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். செப்டம்பர் 7-ந் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார்.அதனைதொடர்ந்து அவர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

இன்று தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணி பஸ் நிலையத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. அதேபோல் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com