வேலூர்: தேவாலய கட்டுமான மேல்தளம் இடிந்து விபத்து; 4 பேர் மீட்பு, 2 பேரை மீட்கும் பணி தீவிரம்

அதிநவீன மீட்பு உபகரணங்கள் உடன் சம்பவ இடத்திற்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.

வேலூர்:  தேவாலய கட்டுமான மேல்தளம் இடிந்து விபத்து; 4 பேர் மீட்பு, 2 பேரை மீட்கும் பணி தீவிரம்
Published on

வேலூர்

வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியருகே தேவாலயம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் சிக்கி கொண்டனர்.

4 பேர் மீட்பு

இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 4 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது. 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிநவீன மீட்பு உபகரணங்கள் உடன் சம்பவ இடத்திற்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது. எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com