சுகாதாரப் பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வேலூர் ஆட்சியர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பேட்டை வாங்கிக்கொண்டு ஜாலியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.
சுகாதாரப் பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வேலூர் ஆட்சியர்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சுகாதார பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர், பேட்டிங், பௌலிங், பீல்டிங், என ஆல்ரவுண்டராக கலக்கினார்.

பொது சுகாதாரத்துறையின் நூறாம் ஆண்டு நிறைவு விழாவையோட்டி சுகாதாரப் பணியாளர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதை தொடக்கி வைக்க வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பேட்டை வாங்கிக்கொண்டு ஜாலியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

இதையடுத்து, பவுலிங் பீல்டிங் என ஆல்ரவுண்டராக விளையாடி அசத்தினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com