வேலூர்: மாடு விடும் திருவிழா - பொதுமக்கள்,பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு அறைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர்: மாடு விடும் திருவிழா - பொதுமக்கள்,பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Published on

வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாடு விடும் திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள்,பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

காட்பாடி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, வருகின்ற 05.03.2026 (மார்ச் 5, 2026) அன்று,பழைய காட்பாடியில் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் பொதுவாக பயன்படுத்தப்படும் விஐடி ரோடு / சென்னை சாலை,அன்று போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாது.மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்படும்.

அன்று பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற இருப்பதால்,தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு,பள்ளிகளுக்கு முன்கூட்டியே சென்று சேருமாறு கேட்டுக் கொள்கிறோம்.அனைவரும் ஒத்துழைத்து செயல்பட வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com