வேலூர் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.3.57 கோடி பறிமுதல்

வேலூர் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்ந்துள்ளது.
வேலூர் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.3.57 கோடி பறிமுதல்
Published on

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வருகிற 5ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும்.

வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பினை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன. இதனால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பறக்கும் படை அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறது.

இதன்படி, ரூ.3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதேபோன்று ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2.89 கிலோ தங்கம், ரூ.5.7 லட்சம் மதிப்புள்ள 13.8 கிலோ வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். தேர்தல் நடைபெறும் நாளான 5ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியின் தலைவர்கள் தீவிர அரசியல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com