வேலூர்: குடியாத்தம் பகுதியில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நில அதிர்வு

குடியாத்தம் பகுதியில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
வேலூர்: குடியாத்தம் பகுதியில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நில அதிர்வு
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த 21-ந் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 25-ந் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறையை அடுத்த மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சில வினாடிகளே நீடித்த இந்த நில அதிர்வின்போது வீட்டில் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள், கட்டில்கள் சில அங்குலம் நகர்ந்துள்ளது. கால்நடைகள் தொடர்ந்து கத்தியது.

இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வவீதிக்கு ஓடி வந்தனர். ஒரே வாரத்தில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com