

வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 84-வது பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக பா.ம.க. கொடி ஏற்றுவது, 84 கிலோ கேக் வெட்டுதல், மரக்கன்றுகள், அன்னதானம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காமராஜ், இளம்பருதி ராமலிங்கம், தினகரன், பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி, 84 கிலோ கேக் வெட்டி, மரக்கன்றுகள் வழங்கியும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் பாலாஜி, அமைப்பு தலைவர் பாபு, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சரவணன், இந்திரா காந்தி, நிர்வாகிகள் உதயகுமார், வேல்முருகன், பண்டரி முரளி, உமாமகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் குமார் நன்றி கூறினார்.