வேலூர்: தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த தொழிலாளி- உயிருடன் மீட்பு

வேலூரில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது காட்பாடிக்கும், லத்தேரிக்கும் இடையிலான தண்டவாளத்தில் ஒருவர் தலை வைத்து படுத்திருப்பது தெரியவந்தது.
தொழிலாளி
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம், காட்பாடி ரெயில்வே ஊழியர்கள் நேற்று அதிகாலை 2.40 மணியளவில் தண்டவாளங்களில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது காட்பாடிக்கும், லத்தேரிக்கும் இடையிலான தண்டவாளத்தில் ஒருவர் தலை வைத்து படுத்திருப்பது தெரியவந்தது.

தொழிலாளி உயிருடன் மீட்பு:

அதைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நேரத்தில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ரெயிலை நடு வழியில் நிறுத்தினர். பின்னர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை அங்கிருந்து உயிருடன் மீட்டனர்.

அதன் பின்னர் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த தொழிலாளி ராமச்சந்திரன் (வயது 46) என்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு முதலுதவி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு, மனநல சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com