வேலு நாச்சியார் நினைவு நாள்: விஜய் மரியாதை

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேலு நாச்சியார் போராடி வெற்றி கண்டார் என விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, இன்று தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






