வேலுநாச்சியார் பிறந்த தினம் - த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

வேலுநாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, அவரது படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்
வேலுநாச்சியார் பிறந்த தினம் - த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
Published on

சென்னை ,

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, பனையூர் அலுவலகத்தில் அவரது படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம். என தெரிவித்துள்ளார் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com