வேம்படி மகாமாரியம்மன் வீதிஉலா

வலங்கைமான் வேம்படி மகாமாரியம்மன் வீதிஉலா
வேம்படி மகாமாரியம்மன் வீதிஉலா
Published on

வலங்கைமான்:

வலங்கைமான் செட்டி தெருவில் உள்ள வேம்படி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) செடில் திருவிழா நடக்கிறது. இந்த விழா கடந்த 3-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 12-ந்தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா காட்சி, முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெள்ளை யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com