வேம்பக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வு

வேம்பக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வேம்பக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வு
Published on

வேம்பக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வுஅரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வேம்பக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தினேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பதவி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் உத்தரவின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யராஜ் வேம்பக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வேம்பக்குடி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி என்பவர் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் முத்துலட்சுமி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com