வாளுக்கு வேலி அம்பலத்திற்கு வீரவணக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வாளுக்கு வேலி அம்பலத்திற்கு வீரவணக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்ததினத்தை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"விடுதலை வீரர்களைப் போற்றி வணங்கும் அரசாக 'தென்பாண்டிச் சிங்கம்' வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடி வருவதுடன், இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் அவரது முழுவுருவ வெண்கலச் சிலையினைத் திறந்து வைத்தேன்!

வீரத்தின் விளைநிலமான சிவகங்கைச் சீமையின் மைந்தனாக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மானம்காத்த மருதிருவரோடு இணைந்து போரிட்ட வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com