சென்னையில் பேட்மிண்டன் விளையாடிய வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உடற்பயிற்சி, தியானம், யோகா உள்ளிட்டவற்றில் அதிக அக்கறை கொண்டவர்.
சென்னையில் பேட்மிண்டன் விளையாடிய வெங்கையா நாயுடு
Published on

சென்னை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உடற்பயிற்சி, தியானம், யோகா உள்ளிட்டவற்றில் அதிக அக்கறை கொண்டவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் இருக்கும்போது அவர் தினந்தோறும் உடற்பயிற்சி, பேட்மிண்டன் பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்தநிலையில், வெங்கையா நாயுடு ஒரு வார கால பயணமாக தமிழகத்துக்கு வந்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கியிருக்கிறார்.

தமிழகத்துக்கு வந்தபோதிலும், வெங்கையா நாயுடு தன்னுடைய வழக்கமான பேட்மிண்டன் பயிற்சியை விடவில்லை. சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்துக்கு நேற்று காலை 6 மணிக்கே சென்று பேட்மிண்டன் விளையாடினார்.

பேட்மிண்டன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் அடிப்பது போன்று ஒவ்வொரு சர்வீஸ்களையும் பறக்கவிட்டு அசத்தினார். அவரது விளையாட்டு திறமை அங்கு பயிற்சிக்கு வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com