"வெங்கையா நாயுடுவின் அரசியல் பயணத்தில் சிறு களங்கம் கூட கிடையாது" - ரஜினிகாந்த் பேச்சு

கட்சிகளைக் கடந்து அனைவரும் வெங்கையா நாயுடுவுக்கு மரியாதை அளித்தனர் என்று ரஜினிகாந்த் கூறினார்.
"வெங்கையா நாயுடுவின் அரசியல் பயணத்தில் சிறு களங்கம் கூட கிடையாது" - ரஜினிகாந்த் பேச்சு
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெறும் தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;-

"வெங்கையா நாயுடு ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அவர், கஷ்டப்பட்டு படித்து ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளைஞர் அமைப்பின் தலைவரானார்.

பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்ட வெங்கையா நாயுடு, பா.ஜ.க.வின் மாநில தலைவராகவும், பின்னர் தேசிய தலைவராகவும் உயர்ந்தார். இதையடுத்து மத்திய மந்திரியாகவும், இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் வெங்கையா நாயுடு பதவி வகித்தார்.

இந்த அரசியல் பயணத்தில் வெங்கையா நாயுடு மீது ஒரு சிறு களங்கம் கூட கிடையாது. கட்சிகளைக் கடந்து அனைவரும் அவருக்கு மரியாதை அளித்தனர். அவர் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி நாங்கள் உரையாடுவோம்.

நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு மருத்துவர் ரவிச்சந்திரன் தான் காரணம். அவரை மருத்துவர் என்று சொல்ல மாட்டேன், எனது நெருங்கிய நண்பர் என்று தான் சொல்வேன்."

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com