டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்: இந்திய கம்யூனிஸ்ட் சொல்வது என்ன?

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்: இந்திய கம்யூனிஸ்ட் சொல்வது என்ன?
Published on

“தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழக அரசின் முடிவு” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், “அதில் தலையிடும் உரிமை எங்களுக்கு இல்லை. அது அவர்களின் உரிமை. ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் மாநிலத்தின் பிரதிநிதியாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே எங்கள் கருத்து” என்று கூறினார்.

சிறப்பு பிரதிநிதி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக சினிமா தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தற்காலிக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி உருவாக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர் அந்தப் பதவி ஏற்றதில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது தேவைப்படும் வரையிலோ, இதில் எது முதலில் நேர்கிறதோ அதுவரை அந்தப் பதவி இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் வெங்கட நாராயணா. தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆரம்பத்தில் த.வெ.க. தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்திக்க செல்லும்போது வெங்கட நாராயணாவை முதல்-அமைச்சர் விஜய் அழைத்து சென்றிருந்தார். அவரது புகைப்படமும் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியானது.

வெங்கட நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருக்கு மிக நெருக்கமானவர் அவர் என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறப்பட்டது. டெல்லி சிறப்பு பிரதிநிதியாக சினிமா தயாரிப்பாளரை தமிழக அரசு நியமித்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com