சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனுக்கு வெங்கய்யா நாயுடு பாரதி விருது வழங்கினார்

சென்னையில் நடந்த பாரதி பெருவிழாவில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பாரதி விருது வழங்கினார்.
சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனுக்கு வெங்கய்யா நாயுடு பாரதி விருது வழங்கினார்
Published on

சென்னை,

வானவில்பண்பாட்டுமையத்தின் 24-ம்ஆண்டுவிழாவை பாரதிபெருவிழா, தேசபக்திபெருவிழாவாக நேற்று தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று விமானம் வழியே சென்னை வந்துள்ளார்.

அவரை முறைப்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார். அதன்பின்னர் மத்தியபுலனாய்வுபிரிவின்முன்னாள்இயக்குனர்டி.ஆர்.கார்த்திகேயனுக்குவெங்கய்யா நாயுடு பாரதி விருது வழங்கினார்.

விழாவில் அவர் பேசும்பொழுது, பாரதியாரின் பாடல்கள், கருத்துகள் தேசிய அளவில் பாட திட்டத்தில் இடம் பெற வேண்டும் என கூறினார். தமிழும், தமிழ்நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என்ற பாரதியின் பாடல்களை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டபொழுது எனக்கு தமிழை கற்க நேரம் கிடைக்கவில்லை. நான் தற்பொழுது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. அனைவரும் தங்களது தாய்மொழியில் பேச வேண்டும்.

கூகுள் நிறைய தகவல்களை வழங்கினாலும், குருவை போல் யாரும் தகவலை தர முடியாது. குருவை ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் மறக்க கூடாது.

அனைவரும் முயற்சி செய்தால் பாரதி கண்ட புதுமை தேசத்தை அடைய இயலும். இந்தியா இதுவரை எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது இல்லை என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com