வகுப்பறையில் மாணவனை கடித்த விஷப்பாம்பு - பாம்போடு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவனை கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்பு கடித்துள்ளது.
வகுப்பறையில் மாணவனை கடித்த விஷப்பாம்பு - பாம்போடு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் களிமண் குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு எட்டாவது வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த மாணவனை கெடிய விஷம் கெண்ட விரியன் பாம்பு கடித்துள்ளது. வலி தாங்காமல் மாணவன் கத்தியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாம்பை அடித்து கொன்று டப்பாவில் அடைத்துள்ளனர்.

பின்னர் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். பெற்றோர் வந்ததும் உடனடியாக மாணவனை அவசர ஊர்தி மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த மாணவன் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com