சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக் டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் போலீஸ் நிலையத் தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட 6 ஆண் டுகள் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. கைதானவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்ததால் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டு இருந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் சம்பவத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com