2026ல் திராவிட மாடல் அரசின் வெர்ஷன் 2.0 லோடிங் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


2026ல் திராவிட மாடல் அரசின் வெர்ஷன் 2.0 லோடிங் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 April 2025 10:55 AM IST (Updated: 29 April 2025 12:15 PM IST)
t-max-icont-min-icon

செப்டம்பர் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு என்று கூறினார்.

இதனை தொடர்ந்து காவல்துறை தொடர்பான அறிவுப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு:-

* ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும். சிறப்பாக செய்ல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருது வழங்கப்படும்.

* 'காலனி' என்கிற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் மாறி இருப்பதால், இனி இந்த சொல் அரசு அலுவலகங்களில் இருந்தும் பொதுபுழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும்

* ஊட்டி, தர்மபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்

* விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

* ஐந்தாவது காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

* கோவையில் ரூ.5 கோடி செலவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும்.

* காவல்துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையை நிர்வகிக்கும் பொருட்டு புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும்.

* சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட, மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும்.

* சென்னை ஆயுதப்படையில்2 புதிய பணியிடங்களும், 250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்.

* காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்களும் 50 நடமாடும் தடயவியல் வாகனமும் வழங்கப்படும்.

இதுவரை பார்த்தது திராவிட மாடலின் 'பார்ட்-1 தான்" "2026- வெர்ஷன் (Version) 2.0 லோடிங் (loading). அதில் இன்னும் பல சாதனைகளை படைக்கப் போகிறோம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். மாநில சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story