

சென்னை,
சசிகலா, தினமும் தொண்டர்களுடன் செல்போன் மூலம் பேசி வருகிறார். அந்தவகையில் அவர், பூண்டியை சேர்ந்த பக்கிரிசாமி, ராமநாதபுரத்தை சேர்ந்த காளிமுத்து, சென்னையை சேர்ந்த சங்கீதா, பொள்ளாச்சியை சேர்ந்த ரத்தினம், கோவையை சேர்ந்த டாக்டர் சிவசங்கரி ஆகியோருடன் நேற்று பேசினார்.அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றுவிட்டு மிக விரைவில் வெளியே வருவேன். தொண்டர்களை சந்திப்பேன். அடிமட்ட தொண்டர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரிகிறது. அதையெல்லாம் நான் சரிசெய்வேன்.
இயற்கையாகவே பெண்கள் ஒரு வேலையை எடுத்துவிட்டால், அதை முடிக்காமல் வேறு எதைப்பற்றியும் நினைக்க மாட்டார்கள். எனவே பெண்கள் அவசியம் அரசியலுக்கு வர வேண்டும்.
பெண்களுடைய பங்களிப்பு நிறைய வேண்டும். எம்.ஜி.ஆருக்கு பின்னர் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இருந்து வழிநடத்தினார். நிச்சயம் நானும் அதே வழியில்தான் செல்வேன். எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள். அதுதான் எப்போதும் என்னுடைய முடிவு. இவ்வாறு அவர் பேசினார்.