மூத்த தமிழறிஞர் அருகோ படத்திறப்பு நிகழ்ச்சி; சென்னையில் இன்று நடக்கிறது

மூத்த தமிழறிஞர் அருகோ படத்திறப்பு நிகழ்ச்சி; சென்னையில் இன்று நடக்கிறது.
மூத்த தமிழறிஞர் அருகோ படத்திறப்பு நிகழ்ச்சி; சென்னையில் இன்று நடக்கிறது
Published on

சென்னை,

தமிழ் தேசிய மூத்த சிந்தனையாளர் அருகோ என்கிற அரு.கோபாலன் (வயது 88). சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த இவர், புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி இறந்தார். கடந்த 1958-ம் ஆண்டில் சி.பா.ஆதித்தனார், நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியபோது அவருடன் இணைந்து அருகோ பணியாற்றினார்.

'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு 'சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது' அருகோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. மறைந்த அருகோவின் படத்திறப்பு மற்றும் குடும் பத்திற்கு நிதி உதவி வழங்கல் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தெய்வநாயகம் பள்ளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மணியரசன், சீமான், வேல்முருகன் உள்பட தமிழறிஞர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com