கால்நடை டாக்டர் தற்கொலை

நிலத்தை விற்க முடியாத விரக்தியில் கால்நடை டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்
கால்நடை டாக்டர் தற்கொலை
Published on

தேனி சமதர்மபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 67). அரசு கால்நடை டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனக்கு சொந்தமாக வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆனால், சிலர் அந்த நிலத்தை விற்க விடாமல் பிரச்சினை செய்து வந்ததோடு, நிலத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், நிலத்தை விற்க முடியாத மன விரக்தியில் இருந்த முருகன், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய மனைவி விஜயா (60) தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com