கால்நடை மருத்துவ முகாம்

பரப்பாடி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ முகாம்
Published on

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள காத்தநடப்பு கிராமத்தில் நேற்று தமிழக அரசின் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முருகன் தொடங்கி வைத்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் என்.ராமதுரை, ஊர் பிரமுகர் சொர்ணலிங்கம், ஊராட்சி செயலர் சொ.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கால்நடை டாக்டர் கணேசன் தலைமையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த கால்நடைகள் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com