கால்நடை மருத்துவ முகாம்

திசையன்விளை அருகே கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கால்நடை மருத்துவ முகாம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் தண்டபாணி, சத்தியபிரபா ஆகியோர் மாடுகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். கன்றுகுட்டிகளை அழைத்து வந்த கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக பால்கேன்கள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை உதவி ஆய்வாளர் சுரேஷ், பராமரிப்பு உதவியாளர் பரமசிவன் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com